பாண்டிச்சேரி சேனைத்தலைவர் சங்கம் மற்றும் திரு. D. காசிராஜா – தர்மராஜா குடும்பத்தினர் இணைந்து, புதுச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதமாபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆன்மிக நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர்.

26-05-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் அறுபத்து மூவர் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் திருவீதியுலா பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 03-06-2026 அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலை ஊஞ்சல் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பாண்டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சேனைத்தலைவர் சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செயற்குழுக் கூட்டம்

பாண்டிச்சேரி சேனைத்தலைவர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 14-06-2026 அன்று திரு. D. காசிராஜா அவர்களின் தர்மராஜா இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் சங்க வளர்ச்சியை முன்னிட்டு பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

முக்கிய தீர்மானங்கள்

  • விரைவில் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது.
  • புதிய நிர்வாகிகளை சமூக முன்னோர்களின் முன்னிலையில் தேர்வு செய்வது.
  • ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் சமூக உறுப்பினர்களின் விவரங்களை சேகரிப்பது.
  • புதிய உறுப்பினர் மற்றும் விலாசப் புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுப்பது.
  • அனைவரும் ஆண்டுச் சந்தாவை செலுத்தி சங்க வளர்ச்சிக்கு ஒத்துழைப்பது.
  • ஒவ்வொரு குடும்பமும் “சேனையர் முரசு” இதழைப் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது.
  • வரவிருக்கும் பொதுக்குழுக் கூட்டம் குறித்து உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிப்பு அனுப்புவது.

மாவட்டச் செய்திகள்

சங்கத்தின் பதிவில் இல்லாதவர்கள், முகவரி மாற்றியவர்கள் மற்றும் உறுப்பினர் விவரங்களை புதுப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

பொறுப்பாளர்தொடர்பு எண்
திரு. K. நந்தகோபாலன்94430 57800
திரு. R. சண்முகம்99655 67686